அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை ஜப்பான் கண்டித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரான் மீதான சமீபத்திய அமெரிக்க வான்வழித் தாக்குதல்களை ஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டுத் தாக்குதல்களுடன் ஒப்பிட்டதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை ஜப்பான் கடுமையாக சாடியுள்ளது.

ட்ரம்பின் கருத்துக்கள் மிகவும் வருந்தத்தக்கவை என்றும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதை நியாயப்படுத்துவதாகக் கருதலாம் என்றும் நாகசாகி முதல்வர் ஷிரோ சுசுகி (Shiro Suzuki) தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப் தனது கருத்துக்களைத் திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here