60 ஆண்டுகளுக்கு முன் செயலிழந்த செயற்கைக்கோள் : திடீர் சிக்னல் – அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்..!

நாசாவின் செயற்கைக்கோள் எதிர்பாராத ரேடியோ சிக்னலை பூமிக்கு அனுப்பியுள்ளது.

நாசாவின் செயற்கைக்கோள் ஒன்று விண்வெளியில் சுமார் 60 ஆண்டுகளாக செயல்படாமல் இருந்துள்ளது.

இந்த நிலையில் திடீரென இந்த செயற்கைக்கோளில் இருந்து சக்தி வாய்ந்த ரேடியோ சிக்னல் வந்துள்ளது.

இது ஆச்சரியத்தையும், ஆர்வத்தையும் தூண்டியுள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சூன் மாதம் 13ஆம் திகதி, மேற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள ரேடியோ டெலிஸ்கோப்ஸ் மூலம் இந்த சிக்னல் கண்டறியப்பட்டது.

இது ரிலே திட்டத்தின் ஒரு பகுதியாக, 1964 ஆம் ஆண்டு நாசாவால் ஏவப்பட்ட ரிலே 2 என்ற தகவல் தொடர்பு செயற்கைக்கோளில் இருந்து பெறப்பட்டிருக்கிறது.

இது குறித்து பேசிய அவுஸ்திரேலியாவில் உள்ள கர்டின் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வானியற்பியல் நிபுணர் கிளான்சி ஜேம்ஸ்,

“நானும் எனது சகாக்களும் நமது கேலக்சியில் இருந்து திடீரென சிக்னல் வந்ததால் அதிர்ச்சியடைந்தோம். ஒருவேளை சிக்னல் அனுப்பிய பொருள் அருகில் இருந்தால், அதை ஆப்டிகல் டெலிஸ்கோப் மூலம் மிக எளிதாக ஆராய முடியும் என்பதால் நாங்கள் அனைவரும் உற்சாகமடைந்தோம்.

ஒருவேளை நாங்கள் ஒரு புதிய பல்சர் அல்லது வேறு ஏதாவது பொருளைக் கண்டுபிடித்திருக்கலாம் என்று நினைத்தோம்” என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாக செயலிழந்துவிட்ட செயற்கைக்கோளில் இருந்து பூமிக்கு சிக்னல் கிடைத்துள்ளது, அதன் அமைப்புகள் திடீரென இயங்கியதால் ஏற்பட்டிருக்காது. நிச்சயம் ஏதேனும் ஒரு வெளிப்புற காரணியில் இந்து வந்திருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles