தாய்லாந்தின் விமானத்தில் இருக்கைக்காக பயணி செய்த செயல் – வெளியேற்றிய ஊழியர்கள்

தாய்லந்தின் Lion Air விமானத்தில் பயணி ஒருவர் தனது இருக்கையை மாற்றிக் கேட்டு அடம்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் விமான ஊழியர் அவரை இழுத்துச்சென்று வெளியேற்றியுள்ளனர். கால்களை நீட்ட போதுமான இடம் வேண்டும் என்பதால் emergency exit பாதைக்கு அருகேயுள்ள இருக்கையில் உட்கார அனுமதிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்தார்.

ஆனால் அந்த இருக்கைக்குக் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்பதால் அவருக்கு இருக்கையை மாற்றிக்கொடுக்க விமான ஊழியர் மறுத்தனர்.

அந்தப் பயணி தகராறு செய்ததை இன்னொருவர் காணொளியாக்கி X தளத்தில் பதிவிட்டார். இறுதியில் ஐவர் அவரை விமானத்திலிருந்து இழுத்துச்சென்று வெளியேற்றினர்.

அவர் அவ்வாறு நடந்துகொண்டதைக் கண்டித்த சக பயணிகள் அடம் பிடித்தவர் சுயநலவாதி என்று கூறினர்.

அந்தச் சம்பவத்தால் விமானம் புறப்பட ஒரு மணி நேரம் தாமதமானது. தொந்தரவு செய்யும் பயணிகளுக்குச் சில விமான நிறுவனங்கள் தண்டனை விதிக்கின்றன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles