Monday, February 2, 2026
HomeMain NewsAmericaஅமெரிக்கா சென்ற இளம் பெண் மாயம்!

அமெரிக்கா சென்ற இளம் பெண் மாயம்!

கடந்த வாரம், அமெரிக்கா சென்ற 24 வயதுடைய இளம் பெண் மாயமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

திருமணம் செய்து கொள்வதற்காக , கடந்த 20 ஆம் திகதியன்று இந்தியாவிலிருந்து, அமெரிக்க சென்ற குறித்த பெண் மாயமாகியுள்ள நிலையில், அவர் எங்கு சென்றார், யாருடன் தொடர்பில் இருக்கிறார் என்பது பற்றி எந்த தகவலும் இல்லை என அந்நாட்டுக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவர் கடைசியாக இருந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி கமராக்களை ஆய்வு செய்தனர்.

அதில், அவர் கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்தியபடி, யாருக்கோ காத்திருந்தது தெரிய வந்தது.

மேலும், அந்த பெண்ணுக்கு ஆங்கிலம் பேசத் தெரியாது என்றும், அமெரிக்காவில் அவருக்கு உறவினர்கள் யாரும் இல்லை என்பதையும் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

இதன் மூலம் அவர் திருமணம் செய்து கொள்வதற்காக அமெரிக்கா வரவில்லை, வேறு காரணத்துக்காக வந்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டனர்.

மர்மமான முறையில் குறித்த இளம் பெண் மாயமாகி இருப்பது காவல்துறையினருக்கு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அந்நாட்டுக் காவல்துறையினர், முன்னெடுத்து வருவதாகவும் வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular