கடந்த இரு மாதங்களில் ஆயிரக்கணக்கான போதைப்பொருட்கள் பறிமுதல்!

கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், நெடுநாள் மீன்பிடி படகுகள் மூலம், நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 1,758 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக, காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

நாட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கப்பட்ட போதைப்பொருட்கள் தொடர்பில், காவல்துறை ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தினால், 4 சோதனை நடவடிக்கைகளினூடாக, இந்த போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன், குறித்த சோதனை நடவடிக்கையின்போது, 25 சந்தேக நபர்களையும், குறித்த பணியகத்தினர் கைது செய்துள்ளனர்.

இந்தநிலையில், குறித்த காலப்பகுதியில் காவல்துறையினர் கைப்பற்றிய ஹெரோயினின் மொத்தப் பெறுமதி 10.84 பில்லியன் ரூபாய் எனவும், ஐஸ் போதைப்பொருளின் மொத்தப் பெறுமதி சுமார் 12.16 பில்லியன் ரூபாய் எனவும், காவல்துறை தெரிவித்துள்ளது.

Drugs seized, Drugs, Heroine Drugs, Ice Drugs

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles