காணி சுவீகரிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ரத்து

வட மாகாணத்திலுள்ள உரிமை கோரப்படாத 5,941 ஏக்கர் காணிகளைச் சுவீகரிக்கும் வகையில் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய, கடந்த மார்ச் மாதம் 28 ஆம் திகதி வெளியிடப்பட்ட காணி சுவீகரிப்பு தொடர்பான வர்த்தமானியை அறிவித்தலை ரத்து செய்வதாக நேற்று முன்தினம் வர்த்தமானி பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, முன்னைய வர்த்தமானி அறிவித்தல் அரசின் கொள்கை முடிவுக்கு அமைய, ரத்து செய்யப்படுவதாக புதிய அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த காணிகள் உள்ள பகுதிகளில் நிலவும் குறிப்பிட்ட பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டும், இந்தக் காணிகளுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உரிமை கோருபவர்களுக்கு போதுமான வாய்ப்பை வழங்குவதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, 3 மாத அவகாசத்துடன், கடந்த மார்ச் மாதம் 28 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை நடை முறைப்படுத்துவதற்கு எதிராக, நேற்று முன்தினம் உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவும் வழங்கியிருந்தது.

இலங்கைத் தமிழரசு கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவின் பிரகாரம் இந்த உத்தரவு வழங்கப்பட்டிருந்தது.

அவ்வாறான பின்னணியிலேயே குறித்த வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெறும் புதிய வர்த்தமானி அறிவித்தல் நேற்று முன்தினம் நள்ளிரவில் வெளியாகியுள்ளது.

எவ்வாறாயினும், இந்த வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்யப்பட்டதை தாம் வரவேற்கின்றபோது, இந்த வர்த்தமானி அறிவித்தல் போதுமான கால அவகாசம் வழங்குவதாகக் கூறி ரத்து செய்யப்படுவதையிட்டு அதிருப்தி அடைவதாக இலங்கைத் தமிழரசு கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles