Tuesday, February 3, 2026
HomeMain NewsAmerica6 பில்லியன் டொலர் பங்குகள் நன்கொடை

6 பில்லியன் டொலர் பங்குகள் நன்கொடை

அமெரிக்கச் செல்வந்தர் வாரன் பபே 6 பில்லியன் டொலர் மதிப்பிலான பங்குகளை 5 அறநிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கியிருக்கிறார்.

அவர் நிறுவிய Berkshire Hathaway வர்த்தகக் குழுமத்தில் வைத்திருந்த பங்குகளையே அவர் வழங்கியுள்ளார்.

Microsoft நிறுவனர் பில் கேட்ஸ் தொடங்கிய கேட்ஸ் அறநிறுவனத்துக்கு அவர் 9.43 மில்லியன் பங்குகளைக் கொடுத்தார்.

மேலும் 943,384 பங்குகளை அவர் மனைவியின் பெயரில் நிறுவப்பட்ட அறநிறுவனத்துக்கும், 660,366 பங்குகளை அவர் பிள்ளைகள் நடத்தும் அறநிறுவனங்களுக்கும் கொடுத்தார்.

பபே 2006ஆம் ஆண்டிலிருந்து அவருடைய செல்வத்தை வாரி வழங்கத் தொடங்கினார்.

அவருக்கு இப்போது 94 வயதாகியுள்ளது. நன்கொடைகளைச் செய்த பிறகும் அவர் உலகில் 6ஆம் மிக பெரிய செல்வந்தராகுதம்.

வாழ்நாள் முழுவதிலும் மொத்தத்தில் அவர் 60 பில்லியன் டொலருக்கு மேல் நன்கொடையாக வழங்கியிருக்கிறார்.

உயிரிழந்த பின் அவருடைய சொத்தில் 99.5 சதவீதத்தை நன்கொடையாக அவருடைய பிள்ளைகள் நடத்தும் அறநிறுவனங்களுக்கு அவர் ஒதுக்கி வைத்திருக்கிறார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular