இந்தோனேசியாவில் இன்று பரபரப்பான சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

போயிங் 737 வகையைச் சேர்ந்த விமானமொன்று ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்றபோது, ​​விமானியின் திறமையால் பாரிய விபத்தொன்று தவிர்க்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் விமானத்தில் இருந்த 97 பயணிகள் மற்றும் ஊழியர்கள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த விமானம் சீரற்ற வானிலை காரணமாக விமானத்தின் ஓடுபாதையிலிருந்து விலகிச்சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here