இரு பயணிகள் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து : 40 பேர் பலி..!

தான்சானியாவின் கிளிமஞ்சாரோ பகுதியில் 2 பயணிகள் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் இரண்டு பேருந்துகளும் தீப்பிடித்து எரிந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதனால் பேருந்திலிருந்த பயணிகள் வெளியில் வரமுடியாமல் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இந்த விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

திருமண நிகழ்வு ஒன்றில் பங்கேற்பதற்காக சென்ற பேருந்து ஒன்று, தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக வேகக் கட்டுப்பாட்டை இழந்து, எதிரில் வந்த பேருந்துடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles