ட்ரம்பின் பைத்தியக்காரத்தனமான யோசனை நிறைவேறினால் புதிய கட்சி உருவாகும் : மஸ்க்

ட்ரம்பின் பைத்தியக்காரத்தனமான செலவு யோசனை நிறைவேறினால், அடுத்த நாள் புதிய கட்சி உருவாகும் என்று ஈலோன் மஸ்க் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கொண்டு வந்துள்ள வரி மற்றும் செலவு யோசனைக்கு, ஈலோன் மஸ்க் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

இதற்கிடையே, இந்த யோசனை அமெரிக்க செனட் சபையில் நிறைவேற்றப்பட்டதையடுத்து, ஈலோன் மஸ்க் தனது அதிருப்தியை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறும்போது,

“வரி மற்றும் செலவு யோசனை, வரலாற்றில் மிகப் பெரிய கடன் அதிகரிப்புக்கு வழிவகுக்கும்.

இந்த யோசனைக்கு வாக்களித்த ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் வெட்கத்தால் தலைகுனிய வேண்டும்.

குடியரசு கட்சி உறுப்பினர்கள் இந்த பூமியில் செய்யும் கடைசி விஷயம் இதுவாக இருந்தால், அடுத்த ஆண்டு தங்கள் முதன்மைத் தேர்தலை இழப்பார்கள்.

இந்த பைத்தியக்காரத்தனமான செலவு யோசனை நிறைவேறினால், அடுத்த நாள் புதிய கட்சி உருவாகும்.

மக்களுக்கு உண்மையில் ஒரு குரல் இருக்க வேண்டும் என்பதற்காக நமது நாட்டிற்கு ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சிக்கு மாற்றாக ஒரு கட்சி தேவை.

அமெரிக்காவில் புதிய கட்சியைத் தொடங்க வேண்டிய நேரம் இதுவாகும்” என ஈலோன் மஸ்க் கூறியுள்ளார்.

 

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles