ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு ஷாக் கொடுத்த அமெரிக்கா

அமெரிக்கா மீது பல்வேறு நாடுகள் அதிக வரிகளை விதிப்பதாக அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி இந்தியா உள்பட 75-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரஸ்பர வரிகளை விதித்தார்.

இந்தியா மீது 26 சதவீத வரியை விதித்தார். பின்னர் சீனாவை தவிர மற்ற நாடுகள் மீதான வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்தார்.

இதையடுத்து இந்தியா உள்பட பல நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. 90 நாட்கள் வரிவிதிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான காலக்கெடு வருகிற 9 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

தங்களுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளாத நாடுகள் மீது 9-ந் தேதிக்குப் பின்னர் வரி விதிப்பு அமலாகும் என்றும் குறிப்பிட்ட நாடுகளுடன் மட்டுமே ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ரஷ்யாவுடன் வர்த்தக உறவு வைத்துள்ள நாடுகளுக்கு 500% சுங்க வரி விதிக்கும் அதிகாரம் வழங்கக்கூடிய சட்ட மசோதாவை| அமெரிக்க செனட் நிறைவேற்றியது.

கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 40% ரஷ்யாவிடம் இருந்துதான் இந்தியா வாங்கி வருகிறது. 2024-25 நிதியாண்டில் இந்தியா – ரஷ்யா இடையே 68.7 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles