சிந்துபாத்தி மனிதப் புதைகுழியில் இன்றும் அகழ்வுகள்

செம்மணி சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இன்றும் அகழ்வுகள் தொடரவுள்ளன.

இதுவரையில் அந்த மனிதப் புதைகுழியில் 37 பேரின் என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அதில் 30 என்புக்கூடுகள் முழுமையாக மீட்கப்பட்டுள்ளன.

நேற்று மாத்திரம் 4 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இந்த அகழ்வுகளில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் தொல்லியல்துறை மாணவர்களும் இணைந்துள்ளனர்.

இந்தநிலையில், குறித்த என்புக்கூடுகள் எந்த காலத்தில் புதைக்கப்பட்டவை என்ற தகவல் ஆய்வுகளின் பின்னரே தெரியவரும்.

எனினும், சிறுவர்களின் என்புக்கூடுகளும் இந்த புதைகுழியிலிருந்து மீட்கப்பட்டு வருகின்றமை மனித உரிமை மீறல் விடயத்தில் கடுமையான குற்றங்கள் புரியப்பட்டுள்ளமையை எடுத்துக் காட்டுகிறது.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles