ஸ்டார்லிங்க் இணைய சேவைக்கான கட்டண அமைப்புக்கள்

ஈலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் (Starlink) செயற்கைக்கோள் இணையச்சேவைக்கான கட்டண அமைப்புக்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் அதிகாரப்பூர்வமாக நேற்று ஸ்டார்லிங்க் இணையச்சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்தநிலையில், குடியிருப்பு மற்றும் வணிக பயனர்கள் என்ற இரண்டு விருப்பங்களின் அடிப்படையில் இந்த கட்டணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில் குடியிருப்பு திட்டத்தில் மாதாந்தம் 12,000 ரூபாய் மற்றும் 15,000 ரூபாய் கட்டணங்களில் சேவைகள் வழங்கப்படவுள்ளன.

இதற்கான ஸ்டார்லிங்க் ஸ்டாண்டர்ட் கிட் என்ற வன்பொருளுக்கு 118ஆயிரம் ரூபாய் அறவிடப்படவுள்ளது

வணிகத்திட்டத்துக்கு 24,000 ரூபாய், 64,000 ரூபாய், மற்றும் 127,000 என்ற மாதாந்த கட்டணங்களும், வன்பொருளுக்கு 9 இலட்சம் ரூபாயும் அறவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சேவை செயற்கைக்கோள் ஊடான சேவை என்பதால், தொலைதூர கிராமங்களும் நன்மையைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles