நாட்டில் மீண்டும் துப்பாக்கி சூடு: தாயும் மகளும் இலக்கு

அவிசாவளை – கொஸ்கம பகுதியில் இன்று அதிகாலையில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

கொஸ்கம – சுதுவெல்ல பகுதியில் உந்துருளியில் பயணித்த இருவரினால் இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த மூவரும் அவிஸ்ஸாவளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

துப்பாக்கி பிரயோகத்தில் தாய், மகள் மற்றும் மற்றுமொரு நபரே காயமடைந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

காயமடைந்த மூவரும் 12, 30 மற்றும் 44 வயதுகளையுடையவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles