கண்டியில் மோட்டார் சைக்கிள் விபத்து – இருவர் பலி

கண்டியில் ஹசலக்க பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹசலக்க – ஹெட்டிப்பொல வீதியில் நேற்று (11) இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக ஹசலக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உடவலவிலிருந்து ஹெட்டிப்பொல நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று முன்னால் பயணித்த சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் விபத்தின்போது மோட்டார் சைக்கிளின் சாரதியும் சைக்கிளில் பயணித்த மற்றோருவரும் படுகாயமடைந்துள்ள நிலையில் மஹியங்கனை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.

பரவதர்ன மற்றும் ஹசலக்க ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞனும் 73 வயதுடைய வயோதிபருமே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார்கள்.

இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles