நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்

நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்

பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் (83) உடல்நலக்குறைவு காரணமாகக் காலமானார்.

ஆந்திராவைச் சேர்ந்த பிரபல நடிகரான கோட்டா சீனிவாச ராவ், தெலுங்கில் பல படங்களில் குணச்சித்திர வேடத்திலும், வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்துப் பிரபலமானவர்.

2003 ஆம் ஆண்டு வெளியான ‘சாமி’ படத்தின் மூலம், தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

மேலும், திருப்பாச்சி, குத்து, ஏய், கோ, சகுனி போன்ற பல படங்களில் நடித்திருந்தார்.

நடிகர், பாடகர், டப்பிங் கலைஞர் என, பன்முக திறமை கொண்ட இவர், மொத்தம் 750 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார்.

இறுதியாக இவரது நடிப்பில் 2023 ஆம் ஆண்டு, ‘சுவர்ண சுந்தரி’ என்ற படம் வெளியானது.

இவரது மறைவுக்கு அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles