நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து புறப்பட்ட குழு சரியாக 28 மணி நேரத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்தது. பின்னர், இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லாவுடன் சென்ற டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்தது.

அமெரிக்காவின் பெக்கி விட்சன், சுபான்ஷூ சுக்லா, ஹங்கேரியின் திபோர், போலந்தின் ஸ்லாவேஜ் விண்வெளிக்கு சென்றுள்ளனர். அவர்களின் 18 நாட்கள் ஆய்வு முடிவடைந்த நிலையில், 4 பேரும் இன்று பூமிக்கு புறப்பட்டுள்ளனர்.

ஆக்சியம் 4 திட்டத்தில், ஆய்வுகளை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து சுபான்ஷூ சுக்லா உள்பட 4 பேர் கொண்ட குழு புறப்பட்டது.

குழு சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் 18 நாள் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு பூமி திரும்புகிறது.

டிராகன் விண்கலத்தில் பூமிக்கு திரும்பும் சுபான்ஷூ சுக்லா குழுவினர் நாளை கலிபோர்னியா கடற்கரையில் வந்து இறங்குவார்கள் என கூறப்பட்டது.

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பூமிக்கு புறப்பட்ட விண்வெளி வீரர்கள் | Astronauts Depart Iss On Journey To Earth

இக்குழு விண்வெளி நிலையத்தில் இருந்து பூமிக்கு வந்தடைய 22.5 மணி நேரம் ஆகும். சர்வதேச ஆய்வு மையத்தில் 7 முக்கிய ஆய்வுகள் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட சோதனைகளை செய்துவிட்டு குழு திரும்புகிறது.

அறிவியல் உபகரணங்கள் மற்றும் ஆராய்ச்சி மாதிரிகள் உள்ளிட்ட 580 பவுன்ட் எடைக்கு மேல் பொருட்களை குழு எடுத்து வருகிறது. நாளை பூமி திரும்பிய உடன் நாசாவின் ஜான்சன் விண்வெளி மையம் செல்லும் குழுவினர் அங்கு மருத்துவ மேற்பார்வையில் இருப்பர்.

உடல் நிலை சீராக உள்ளது என்பது உறுதி செய்யப்பட்ட பின்னர் அவரவர் சொந்த நாட்டிற்கு அனுப்பப்படுவர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here