வரலாற்று சாதனை படைத்த இத்தாலி வீரர்

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகின்றது.

இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில், உலகின் முன்னணி வீரர்களான இத்தாலியின் ஜானிக் சின்னர் (Jannik Sinner) மற்றும் ஸ்பெய்னின் கார்லோஸ் அல்காரஸ் (Carlos Alcaraz) ஆகியோர் மோதினர்.

குறித்த போட்டியில் முதல் செட்டை 6-4 என ஸ்பெய்னின் கார்லோஸ் அல்காரஸ் (Carlos Alcaraz) கைப்பற்றினார்.

இருப்பினும், பின்னர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இத்தாலியின் ஜானிக் சின்னர் ((Jannik Sinner) அடுத்த 3 செட்களை 6-4, 6-4, 6-4 என்ற கணக்கில் வென்று முதல் முறையாக செம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

இதன் மூலம் விம்பிள்டன் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில், செம்பியன் பட்டத்தை வென்ற முதல் இத்தாலி வீரர் என்ற வரலாற்று சாதனையை ஜானிக் சின்னர் (Jannik Sinner)தன்வசப்படுத்தியுள்ளார்.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles