இஸ்ரேல்-சிரியா இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் அமல்

சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலில் 300-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.

சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் கடந்த புதன்கிழமை திடீரென இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் நடத்தியது. இதில், ட்ரூஸ் பகுதியில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது.

பெண்கள், குழந்தைகள் என 300-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். தெற்கு பகுதியில் குவிக்கப்பட்ட படைகள் மீதும் தாக்குதல்கள் நடந்தன. சிரியாவில் சிறுபான்மையினராக உள்ள ட்ரூஸ் மக்களை பாதுகாப்பதற்காக இந்த தாக்குதல் என இஸ்ரேல் தெரிவித்ததுடன், சிரியாவின் தெற்கு பகுதியில் இருந்து அரசின் படைகள் வாபஸ் பெறப்பட வேண்டும் என்றும் தெரிவித்தது.

இந்நிலையில், இஸ்ரேல் மற்றும் சிரியா இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ளது. இந்த தகவலை துருக்கிக்கான அமெரிக்க தூதர் டாம் பாரக் உறுதி செய்துள்ளார்.

இதற்கு துருக்கி, ஜோர்டான் மற்றும் அண்டை நாடுகளும் ஆதரவு தெரிவித்து உள்ளன. இதன்படி, ஸ்வெய்டா மாகாணத்தில் சிரியாவின் குறிப்பிட்ட அளவிலான படையினர் செல்வதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

எனினும், அமெரிக்காவில் உள்ள இஸ்ரேல் தூதரகம் மற்றும் கனடாவில் உள்ள சிரிய தூதரகம் இதற்கு உடனடியாக எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles