சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் தனது வருடாந்த மாநாட்டைச் சிங்கப்பூரில் நடத்தியுள்ளது.

இதன்போது, ஆப்கானிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த இடம்பெயர்ந்த பெண் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான ஆதரவு குறித்து புதிய முயற்சிகளை, சம்மேளனம் அறிவித்துள்ளது.

இந்த முயற்சி சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபை மற்றும் கிரிக்கெட் அவுஸ்திரேலியா ஆகியவற்றின் தலைமையிலான கூட்டு முயற்சியின் மூலம், சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத் துணைத் தலைவர் இம்ரான் குவாஜாவின் மேற்பார்வையின் கீழ் முன்னெடுக்கப்படுகிறது.

இதன்படி, இந்தியாவில் 2025 மகளிர் கிரிக்கெட் உலகக் கிண்ணம் மற்றும் இங்கிலாந்தில் 2026 மகளிர் 20க்கு20 உலகக் கிண்ணம் உள்ளிட்ட முக்கிய உலகளாவிய நிகழ்வுகளில் வாய்ப்புக்கள் வழங்கப்படவுள்ளன.

இதேவேளை, அமெரிக்கா கிரிக்கெட் சபை, 3 மாத காலத்திற்குள் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை முடிப்பது உட்பட விரிவான நிர்வாக சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here