டி.வி.கே செயலிக்கு வந்த சிக்கல்

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு தீவிரமாக தயாராகி வருகின்றார்.

இதன்படி தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆவது மாநில மாநாட்டை ஒகஸ்ட் 25ஆம் திகதி நடத்துவதற்கு விஜய் திட்டமிட்டுள்ளார்.

இந்தநிலையில் தமிழக வெற்றிக் கழகத்துக்கு புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்காக “மை டி.வி.கே.” என்ற புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த செயலியை விஜய் இன்று அறிமுகப்படுத்த திட்டமிட்டிருந்த நிலையில், குறித்த நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டி.வி.கே. செயலியில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப பிரச்சினை காரணமாகவே அதன் தொடக்க விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து எதிர்வரும் 24ஆம் திகதி செயலியின் தொடக்க விழா மற்றும் மாவட்ட செயலாளர்களுடனான ஆலோசனை கூட்டம் ஆகியவை நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles