தென் கொரியாவில் பல நாட்களாகப் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகள் ஏற்பட்டதில் 14 பேர் உயிரிழந்ததுடன், 12 பேர் காணாமல் போயுள்ளனர்.

அத்துடன், ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டுள்ளதுடன், 41,000 க்கும் மேற்பட்ட வீடுகளுக்குத் தற்காலிகமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நாட்டின் அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாட்டின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி லீ ஜே-மியுங் (Lee Jae Myung) மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளை விசேட அனர்த்த வலயங்களாக அறிவித்துள்ளார்.

அதேநேரம், அவசரகால மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here