சிவகார்த்திகேயன் பல நடிகர்களுக்கு உத்வேகமாக மாறியிருக்கிறார்- ஏ.ஆர்.முருகதாஸ்

சிவகார்த்திகேயன் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23-வது படமான மதராஸி திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ‘சலம்பல’ பாடல் நாளை வெளியாகவுள்ளது. இப்பாடலை சூப்பர் சுப்பு வரிகளில் சாய் அபயங்கர் பாடியுள்ளார்.

அனிருத் மற்றும் சாய் அபயங்கர் ஒன்றாக இருக்கும் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஏற்கனேவே வெளியான இப்பாடலின் ப்ரோமோ வீடியோ நல்ல வரவேற்பை பெற்றது. மதராஸி திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்நிலையில், இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், சிவகார்த்திகேயன் குறித்து எழுப்பிய கேள்விக்கு நெகிழ்ச்சியாக பதில் அளித்துள்ளார்.

அப்போது அவர் கூறுகையில்,”மான்கராத்தே நிகழ்ச்சியின் போது, தொலைக்காட்சியில் இருந்து வந்த ஒரு நடிகராக சிவகார்த்திகேயனை நான் கண்டேன்.

எந்த பின்னணியும் இல்லாமல் வரும் பல நடிகர்களுக்கு அவர் ஒரு உத்வேகமாக மாறியுள்ளார். இப்போது மதராசி நிகழ்ச்சியில் சிவகாரத்திகேனின் இந்த மிகப்பெரிய வளர்ச்சிக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles