இந்தியாவின் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள, திரேஸ்புரம் அண்ணா நகர் பகுதியிலிருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக இலங்கைக்குக் கடத்த முயன்ற பழமையான ஐம்பொன் விஷ்ணு சிலையுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கைக்கு சட்டவிரோதமாகப் பொருட்கள் கடத்த இருப்பதாகக் கிடைத்த இரகசிய தகவலுக்கமை தூத்துக்குடி காவல்துறையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது குறித்த நபரிடமிருந்து மூன்று கிலோகிராம் நிறையுடைய ஐம்பொன் விஷ்ணு சிலை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளைத் தூத்துக்குடி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here