மாத்தறையில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் காயம்

மாத்தறை, கபுகம (Kapugama) பகுதியில் இன்று (03) காலை துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

இதில் பொதுமகன் ஒருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

உந்துருளியில் பிரவேசித்த இருவரினால் குறித்த துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்த 48 வயதுடைய பொதுமகன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles