வெர்டிஸ்’ குடியரசை உருவாக்கிய அவுஸ்திரேலிய இளைஞன்

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த டேனியல் ஜாக்சன் என்ற 20 வயதுடைய இளைஞன் குரோஷியா-செர்பியா எல்லையில், டானூப் ஆற்றங்கரையில் உள்ள 125 ஏக்கர் உரிமை கோரப்படாத ‘பாக்கெட் த்ரீ’ நிலத்தில் ‘வெர்டிஸ் குடியரசு’ என்ற மைக்ரோநேஷனை 2019இல் உருவாக்கி, அதன் ஜனாதிபதியாக தன்னை அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நாட்டில் ஆங்கிலம், குரோஷியன், செர்பிய மொழிகளையும், யூரோ நாணயத்தையும் பயன்படுத்துகின்றது.குரோஷியாவின் ஓசிஜெக் நகரில் இருந்து 400 குடிமக்களைக் கொண்ட குறித்த நாட்டிற்கு, படகு மூலம் மட்டுமே செல்லமுடியுமாம்.

2023இல் குரோஷிய பொலிஜாரால் ஜாக்சன் கைதுசெய்யப்பட்டு, நாடு கடத்தப்பட்டு, குரோஷியாவிற்கு வாழ்நாள் தடை பெற்றுள்ளார்.

இருப்பினும், அவர் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தி, வெர்டிஸை சர்வதேச அங்கீகாரம் பெறச் செய்ய முயல்கிறார். கடவுசீட்டுகள் வழங்கப்பட்டாலும், அவை சர்வதேச பயணத்திற்கு செல்லாது என ஜாக்சன் எச்சரித்துள்ளார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles