பாலிவுட் திரையுலகின் கதாநாயகிகளில் கஜோல் முக்கியமானவர். சமீபத்தில் அவர் மகாராஷ்டிரா அரசு வழங்கிய மாநில திரைப்பட விருது 2025 விழாவில் அவருடைய தாய் தனுஷாவுடன் கலந்துக் கொண்டார். கஜோல் கலைத்துறையில் செய்த செயல் மற்றும் அவரது இந்திய சினிமா பங்களிப்பை முன்னிட்டு கவுரவ விருதான ராஜ் கபூர் விருதை வழங்கினர்.

அப்போது அங்கு பத்திரைக்கையாளர்களை சந்தித்தார் கஜோல். கஜோல் பத்திரிக்கையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஆங்கிலம் மற்றும் மராத்தி மொழியில் பதிலளித்தார். அப்போது ஒருவர் இந்தியில் பதிலளிக்கும்படி கேட்டுக்கொண்டார். இதை கேட்ட கஜோல் சாட்டென கடுப்பாகி ” இப்போ நான் இந்தியில் பேச வேண்டுமா? நான் பேசியது புரிய வேண்டியவர்களுக்கு புரியும்” என்ற கருத்தை பதிவு செய்துவிட்டு கிளம்பினார். இந்த காணொலி தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here