சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வாகியுள்ள ரசவாதி..!

இயக்குநர் சாந்தகுமார் மற்றும் நடிகர் அர்ஜுன் தாஸ் கூட்டணியில் சிறந்த வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ரசவாதி.

இந்த திரைப்படத்தில் தன்யா ரவிச்சந்திரன், சுஜித் சங்கர், ரம்யா சுப்ரமணியம், ஜி.எம். சுந்தர், ரேஷ்மா வெங்கடேஷ், சுஜாதா மற்றும் ரிஷிகாந்த் ஆகியோர் நடித்திருந்தனர்.

இந்த நிலையில் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதுக்கு ரசவாதி திரைப்படம் தேர்வாகியுள்ளது.

பிரான்சில் நடைபெற்ற நைஸ் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை ரசவாதி திரைப்படத்தின் மூலம் சரவணன் இளவரசு மற்றும் சிவா பெற்றுள்ளனர்.

மேலும் இந்தாண்டுக்கான லண்டன் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த ஒலி வடிவமைப்பு விருதை, ரசவாதி படத்துக்காக ஒலி வடிவமைப்பாளர் தபாஸ் நாயக் பெற்றார்.

இந்த நிலையில் ரசவாதி படக்குழுவிற்குப் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles