மீண்டும் நேரடி விமான சேவைகளை தொடங்கும் இந்தியா- சீனா..

அடுத்த மாத தொடக்கத்தில் இந்தியாவும் சீனாவும் நேரடி விமான சேவைகளை மீண்டும் தொடங்கக்கூடும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ போன்ற விமான நிறுவனங்கள் குறுகிய காலத்தில் சீனாவிற்கு விமானங்களை இயக்க தயாராக இருக்குமாறு இந்திய அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

முன்னதாக கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான நேரடி விமான இணைப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

ஜூன் 2020 இல் கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் சீன மற்றும் இந்திய ராணுவ வீரர்களுக்கு இடையே நடந்த மோதலுக்குப் பிறகு இந்தியா-சீனா உறவுகள் விரிசல் அடைந்தன.

இந்நிலையில் இந்தியா மீதான டிரம்ப் உடைய 50 சதவீத வரிவிதிப்பு இந்தியாவையும் சீனாவையும் ஒரே கோட்டில் நிறுத்தியுள்ளன.

இந்த மாத இறுதியில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சிமாநாட்டிற்காக பிரதமர் மோடி சீனாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். இது 2019 க்குப் பிறகு சீனாவிற்கு அவர் மேற்கொள்ளும் முதல் பயணமாகும்.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles