சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்து வருகிறது. இது அமெரிக்க ஓபனுக்கு முன்னோட்டமாக கருதப்படுகிறது.

இந்தப் போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய அல்காரஸ் 6-3, 4-6, 7-5 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here