பழங்கள், காய்கறிகளை பயிரிட்டு கடைகளுக்கு விற்கும் தொடக்கப் பள்ளி மாணவர்கள்!

இங்கிலாந்திலுள்ள தொடக்கப் பள்ளி மாணவர்கள் பழங்கள் மற்றும் காய்கறிகளைப் பயிரிட்டு, உணவகங்களுக்கும் கடைகளுக்கும் விற்று வருகின்றனர்.

Wicor என்ற தொடக்கப் பள்ளியில் 16 ஆண்டுகளாக இந்தத் தோட்ட வேலை நடந்துவருவதாக BBC சுட்டிக்காட்டுகிறது.

இதன்மூலம் பள்ளி ஆண்டுக்கு 5,000 முதல் 8,000 பவுண்ட் வரை வருமானமும் கிடைப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தோட்ட வேலைக்குத் தேவையான பொருள்கள் மற்றும் உரம் ஆகியவற்றை வாங்க அந்தப் பணம் பயன்படுத்தப்படுகிறது.

காய்கறிகளை வாங்குவோரில் சிலர் அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் என்றும் BBC குறிப்பிடுகிறது.

வெங்காயம் மற்றும் பூண்டு தவிர்த்து, சில அரிய வகை காய்கறிகளும் இங்கு பயிரிடப்பட்டுள்ளன.

பள்ளியில் தொடங்கிய தோட்ட வேலையைச் சில மாணவர்கள் வீட்டிலும் செய்கின்றனர்.

மாணவர்களை இயற்கையுடன் இணைக்க இந்த முயற்சி எடுக்கப்பட்டிருப்பதாகப் பள்ளி கூறுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles