காசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 50 பணயக்கைதிகளையும், ஹமாஸ் விடுவிக்க வேண்டுமென தமது நாடு கோருவதாக, இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், ஹமாஸ் ஒப்புக்கொண்ட 60 நாள் போர் நிறுத்தத்திற்கான புதிய திட்டத்தை, இஸ்ரேல் ஏற்றுக் கொள்வது குறித்து, அவர் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

கட்டார் மற்றும் எகிப்து முன்வைத்த இந்த திட்டத்தில், பணயக்கைதிகளில் அரைவாசி பேர் விடுவிக்கப்படுவார்கள் என்றும், இஸ்ரேல் முன்னர் ஏற்றுக்கொண்ட அமெரிக்கத் திட்டத்திற்கு இது கிட்டத்தட்ட ஒத்ததாக இருக்கும் என்றும் கட்டார் தெரிவித்துள்ளது.

எனினும், பணயக்கைதிகளில் அரைவாசி பேர் என்ற திட்டத்தை இஸ்ரேல் ஏற்காது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here