‘கோட்’, ‘லவ் டுடே’, ‘டிராகன்’ மெகா வெற்றிப் படங்களை தொடர்ந்து ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் புதிய படம் ‘ஏஜிஎஸ் 28’.

குடும்பத்துடன் பார்த்து ரசிக்கக்கூடிய வகையில் உருவாகவுள்ள இப்படத்தை புதுமுக இயக்குநர் சுபாஷ் கே ராஜ் இயக்குகிறார். இப்படத்தை பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குநர் ஆவார்.

அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, பிரதீப் E ராகவ் படத்தொகுப்பை கையாளுகிறார். வீரமணி கணேசன் கலை இயக்கத்திற்கு பொறுப்பேற்க, பீனிக்ஸ் பிரபு சண்டைக் காட்சிகளை இயக்க, தினேஷ் மனோகரன் ஆடைகளை வடிவமைக்கிறார்.

‘கே.ஜி.எஃப்’ புகழ் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் தமிழில் அறிமுகமாகிறார்.

முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் இயக்குநர்களுடன் மெகா பட்ஜெட் படங்கள், அறிமுக இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுடன் புதிய ட்ரெண்டை தொடர்ந்து உருவாக்கும் படங்கள் என அடுத்தடுத்து சாதனை படைத்து வரும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் ‘கோட்’, ‘லவ் டுடே’, ‘டிராகன்’ என மெகா வெற்றிப் படங்களை தொடர்ந்து, 28வது படைப்பாக கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் உருவாகும் புதிய படம் பூஜையுடன் சென்னையில் இன்று துவங்கியது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here