‘நடிக்க மட்டும்தான் முடியும்… ரிலீசும் நானே செய்ய முடியுமா? – வருத்தப்பட்ட ஆண்ட்ரியா

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ஆண்ட்ரியா, மிஷ்கின் இயக்கத்தில் நடித்து முடித்த ‘பிசாசு-2’ படம் சில ஆண்டுகளாகவே வெளிவராமல் முடங்கி கிடக்கிறது. ஆனாலும், ‘பிசாசு-2’ படத்தில் ‘ஆண்ட்ரியா அப்படி நடித்துள்ளார், இப்படி நடித்துள்ளார்’ என மிஷ்கின் தொடர்ந்து பேசி, படத்தின் மீதான எதிர்பார்ப்பு குறையாமல் பார்த்துக்கொண்டு வருகிறார்.

இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஆண்ட்ரியாவிடம், ‘பிசாசு-2’ படம் எப்போது ரிலீசாகும்? என கேட்கப்பட்டது. இதற்கு, ”நடிக்க மட்டும்தான் முடியும். ரிலீசும் நானே செய்ய முடியுமா? நான் மட்டும் தயாரிப்பாளராக இருந்தால் சில ஆண்டுகளுக்கு முன்பே ரிலீசாக்கி இருப்பேன். என்ன செய்ய…” என்று வருத்தப்பட்டு கொண்டார்.

முன்னதாக இதே நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை ஐஸ்வர்யா ராஜேசை நோக்கி சிலர் மின்விசிறியைத் திருப்ப, அவரது தலைமுடி காற்றில் பறந்தது. நிகழ்ச்சிக்காக கூந்தலை சீவி, சிங்காரித்து வந்த ஐஸ்வர்யா ராஜேஷ், இதனால் கடும் ‘அப்செட்’ ஆகி போனார். ‘பேனை ஆப் பண்ணுங்க…’ என்று அங்கிருப்பவர்களை கடிந்து கொண்டார். பின்னர் உதவியாளர் கலைந்த அவரது கூந்தலை சரிசெய்த பிறகே ஆசுவாசமானார்.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles