ரஷ்யாவிலிருந்து ஐரோப்பாவுக்கு எரிவாயு கொண்டு செல்லும் குழாய்களை சேதப்படுத்திய விவகாரம் தொடர்பில் உக்ரைன் நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரஷ்யாவிலிருந்து ஐரோப்பாவுக்கு எரிவாயுவைக் கொண்டு செல்வதற்காக அமைக்கப்பட்டிருந்த Nord Stream 1 மற்றும் 2 என்னும் குழாய்களுக்கு அருகில் 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26ஆம் திகதி வெடி விபத்துக்கள் நடந்துள்ளதை டென்மார்க் அதிகாரிகள் கண்டுபிடித்தார்கள்.

மூன்று குழாய்கள் சேதமாகியதைத் தொடர்ந்து எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்ட நிலையில், அது நாசவேலை என சந்தேகம் ஏற்பட்டது.

அந்தக் குழாய்கள் ஜேர்மனிக்கு சொந்தமானவை என்பதாலும், அவை டென்மார்க் மற்றும் ஸ்வீடன் கடற்பகுதியில் சேதமடைந்ததாலும், மூன்று நாடுகளும் அந்த குழாய்கள் சேதப்படுத்தப்பட்ட விடயம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வந்தன.

இந்நிலையில், எரிவாயுக் குழாய்கள் சேதப்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பில், சந்தேக நபர் ஒருவர் இத்தாலி நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜேர்மன் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

உக்ரைன் நாட்டவரான அவரது பெயர் Serhii K. அவரைப் பிடிக்க உதவிய இத்தாலி அதிகாரிகளுக்கும் சர்வதேச சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கும் ஜேர்மன் அதிகாரிகள் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here