இன்றைய வானிலை குறித்த முன்னறிவித்தல்…!

நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை இன்று (24) மட்டத்தில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இந்த நிலைமையை எதிர்பார்க்கலாம் என்று அந்த திணைக்களம் சுட்டிக் காட்டியுள்ளது.

குறித்த பகுதிகளில் வெப்பநிலை 39 – 45 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதனால் குறித்த பகுதிகளில் உள்ள மக்கள் உடலுக்குத் தேவையான அளவு தண்ணீர் பருகுவதுடன், வயதானவர்கள் மற்றும் நோயாளர்கள் மீது அதிக கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஊவா மாகாணத்திலும், அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்குப் பின்பு சில இடங்களில், மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல், சபரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படும் அனர்த்தங்களைக் குறைப்பதற்குத் தேவையான பாதுகாப்பு முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles