ட்ரம்பை விமர்சித்தவர் வீட்டில் FBI சோதனை..!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டன் (John Bolton), இந்தியா மீதான ட்ரம்பின் வரி விதிப்பு கொள்கையைக் கடுமையாக விமர்சித்திருந்தார்.

ரஷ்யாவுக்கு எதிராகப் பொருளாதார அழுத்தத்தை உருவாக்க இந்தியாவுக்கு ட்ரம்ப், 50 சதவீத வரி விதித்தது, அமெரிக்காவுக்கு மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என அவர் தெரிவித்திருந்தார்.

மேலும், “ட்ரம்பின் இத்தகைய செயல்கள் நம் நாட்டை ஆபத்தில் ஆழ்த்துகின்றன” என்றும் ஜோன் போல்டன் கூறியிருந்தார்.

இந்த நிலையில், அமெரிக்க அரசாங்கத்தின் இரகசிய ஆவணங்கள், FBI பறிமுதல் செய்த ஆதாரங்களைச் சேமித்து வைத்திருந்ததாகக் கூறி, ஜோன் போல்டனின் வீடு மற்றும் அலுவலகங்களில் FBI, எனப்படும் மத்தியப் புலனாய்வு அமைப்பினர் சோதனையில் ஈடுபட்டனர் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles