Tuesday, February 3, 2026
HomeMain NewsOther Countryவியட்நாமின் கரையோரப் பிரதேசத்தை தாக்கிய சக்தி வாய்ந்த சூறாவளி..!

வியட்நாமின் கரையோரப் பிரதேசத்தை தாக்கிய சக்தி வாய்ந்த சூறாவளி..!

கிழக்கு வியட்நாமின் கரையோரப் பிரதேசத்தை சக்தி வாய்ந்த சூறாவளி தாக்கியுள்ளது.

இதனையடுத்து, கரையோரப் பகுதியைத் தொடர்ந்தும் பலத்த காற்று வீசுவதுடன், கனமழை பெய்துவருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

காஜிகி எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தச் சூறாவளி, மணித்தியாலத்திற்கு 133 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுவதாக வியட்நாமின் தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது.

காற்றின் வேகம் எதிர்வரும் மணித்தியாலங்களில் குறைந்தாலும், மழையின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் பாதிப்படைந்துள்ள பிரதேசங்களைச் சேர்ந்த 586,000க்கும் மேற்பட்ட மக்களைத் தமது வீடுகளை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular