மேற்கு இலண்டன் விபத்தில் பெண் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழப்பு

மேற்கு இலண்டன் தெருவில் பெண்ணொருவர் சைக்கிள் ஓட்டுநர் மீது மோதிய விபத்து சம்பவம் தொடர்பில், அங்கிருந்து தப்பியோடிய மொபட் ஓட்டுநரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

வெள்ளிக்கிழமை, மாலை 5.40 மணிக்குப் பிறகு, ஒரு சைக்கிள் மற்றும் ஒரு மொபெட் மோதியதாக வந்த தகவலைத் தொடர்ந்து, அவசர சேவைகள் ஹேமர்ஸ்மித்தில் உள்ள கிங் தெருவுக்கு விரைந்தன.

40 வயதுடைய பெண் சைக்கிள் ஓட்டுநர், துணை மருத்துவர்கள் அங்கு வந்தபோது கடுமையான காயங்களால் அவதிப்பட்டார். அவரைக் காப்பாற்ற அவர்கள் முயற்சித்த போதிலும், அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

மொபட் ஓட்டுநரை, பொலிஸார் தற்போது தேடி வருகின்றனர். அவர் சம்பவ இடத்திலிருந்து கால்நடையாக தப்பிச் சென்றதாக நம்பப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles