இந்திய உணவகத்துக்கு வேண்டுமென்றே தீ வைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு!

இலண்டனில் இந்தியன் அரோமா (Indian Aroma) எனும் உணவகத்துக்கு வேண்டுமென்றே தீ வைக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன

இம்மாதம் 22ஆம் திகதி நடந்த இந்த தீ சம்பவத்தில் ஐவர் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகினர். அவர்களில் இருவர் உயிருக்குப் போராடுவதாக வைத்தியசாலைத் தகவல் தெரிவிக்கிறது.

உள்ளூர் நேரப்படி இரவு 9 மணியளவில் உணவகம் முற்றிலுமாகத் தீப்பற்றியது. தீயை அணைக்கத் தீயணைப்புப் படை சுமார் ஒன்றரை மணி நேரம் போராடியதாகக் கூறப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 15 வயது சிறுவனும் 54 வயது ஆணும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தைக் கண்டவர்கள் தீயில் சிலரின் உடல்கள் கிட்டத்தட்ட முழுமையாகக் கருகியதாக தெரிவித்துள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles