ஆஸ்திரேலியாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பொலிஸார் இருவர் உயிரிழப்பு

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணம் பொரிபன்ஹா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பாலியல் குற்ற சம்பவங்கள் நடைபெறுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் அடிப்படையில் அப்பகுதிக்கு நேற்று காலை 10 பொலிஸார் விசாரணை நடத்த சென்றனர்.

பொரிபன்ஹா பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு விசாரணைக்கு சென்றபோது அங்கிருந்த நபர் பொலிஸார் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினார். இந்த துப்பாக்கி சூட்டில் 2 பொலிஸார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், ஒரு பொலிஸ் அதிகாரி படுகாயமடைந்தார்.

இதையடுத்து படுகாயமடைந்த பொலிஸ் அதிகாரி மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். துப்பாக்கி சூடு நடத்திய நபர் தப்பியோடிய நிலையில் அவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. துப்பாக்கி சூடு நடத்திய நபர் ஏற்கனவே குற்ற வழக்கில் தொடர்புடையவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles