ஹமாஸின் கேமராவுக்கு வைத்த குறி தப்பியதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவிப்பு!

இஸ்ரேலியப் படையினரின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் ஹமாஸின் கேமராவைத் தகர்க்க முயன்றதாக, இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

கடந்த திங்கட்கிழமையன்று (25) காஸாவில் உள்ள நாசர் மருத்துவமனையை இஸ்ரேல் தாக்கியது.

இந்தத் தாக்குதலில் 5 ஊடகவியலாளர்கள் உட்பட 20 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் Al Jazeera, Reuters மற்றும் AP உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றியவர்கள் ஆவர்.

நடந்த அசம்பாவிதத்திற்கு இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹூ வருத்தம் தெரிவித்துள்ளார்.

குறித்த தாக்குதலை மேற்கொள்ளும் முடிவு மற்றும் அதற்கு வழங்கப்பட்ட உத்தரவு உள்ளிட்டவை குறித்து மேல் விசாரணை நடத்தப்படும் என்றும் குறிப்பிடப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles