யாழ்ப்பாணம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட கொக்குவில் பகுதியில் 9 கிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் ரக போதைபொருட்களுடன் யுவதி ஒருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை யாழ்ப்பாணம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here