ஆப்கானிஸ்தான் நில அதிர்வினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,124 ஆக உயர்வு..!

தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நில அதிர்வினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்ந்துள்ளது.

இதன்படி, நில அதிர்வினால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,124 ஆக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சுமார் 3,000 பேர் காயமடைந்துள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

குறித்த நில அதிர்வினால் குனார் மாகாணம் மிக மோசமான சேதத்தைச் சந்தித்துள்ளதுடன், முழுக் கிராமங்களும் அழிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், மலைப்பாங்கான நிலப்பரப்பு மற்றும் தடைப்பட்ட வீதிகள் காரணமாக மீட்பு நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக மீட்புப்பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles