ஹொங்கொங் திறந்தநிலை பெட்மிண்டன் போட்டியில் தோல்வியடைந்த இந்திய வீராங்கனை பி.வி சிந்து தொடரிலிருந்து வெளியேறியுள்ளார்.
ஹொங்கொங் திறந்தநிலை பெட்மிண்டன் தொடர் தற்போது இடம்பெற்று வருகிறது.
இதில் நேற்றிரவு நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றுப் போட்டியில் இந்திய முன்னணி வீராங்கனை பி.வி. சிந்து மற்றும் டென்மார்க்கின் கிறிஸ்டோபர் சென் ஆகியோர் மோதினர்.
இதில் முதல் சுற்றை பி.வி. சிந்து கைப்பற்றிய நிலையில், அடுத்த 2 செட்டுகளை கிறிஸ்டோபர்சென் கைப்பற்றி வெற்றி பெற்றார்.
