ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினரான மாகந்துரே மதூஷின் மனைவி, தமது கணவரின் மரணம் குறித்து விசாரணை நடத்தக்கோரி, காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரியவிடம் கடிதம் ஒன்றைச் சமர்ப்பித்துள்ளார்.

இதன்படி, காவல்துறையினரின் காவலில் இருந்த தமது கணவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சந்தேகநபருக்கு நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டிருந்தாலும் அது ஏற்றுக் கொள்ளப்படும்.

அதனைவிடுத்து, மாகந்துரே மதூஷ் மிருகத்தைப்போல வீதியில் வைத்துக் கொலை செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையிலேயே, உரிய தரப்பினரிடமிருந்து நீதியைப் பெற்றுத்தருமாறு கோரி காவல்துறை மா அதிபரை அணுகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தற்போதைய அரசாங்கம் இந்த விடயத்தில் சட்டத்தை அமுல்படுத்தும் எனத் தாம் நம்புவதாகவும் மாகந்துரே மதூஷின் மனைவி தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here