துல்கர் சல்மானின் காந்தா படம் ரிலீஸ் திகதி தள்ளிப்போக வாய்ப்பு..!

இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் காந்தா. இப்படத்தில் சமுத்திரக்கனி, பாக்யஸ்ரீ போர்ஸ், ராணா டகுபதி ஆகியோர் நடித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தை, வேபாரர் பிலிம்ஸ் மற்றும் ராணா ஸ்பிரிட் மீடியா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளனர்.

காந்தா திரைப்படம் செப்டம்பர் 12ஆம் திகதி ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது திடீரென அப்படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்படுவதாக படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தற்போது, துல்கர் தயாரிப்பில் வெளியான லோகா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருவதால் இன்னும் சில தினங்கள் திரையரங்கங்களில் ஒலிக்க வேண்டுமென படக்குழு விரும்புவதால் காந்தா திரைப்படம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles