ஆசிய கோப்பை 2025: ஓமனை எளிதில் வீழ்த்தியது பாகிஸ்தான்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.

இன்று நடைபெற்ற 4-வது லீக் ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான், ஓமன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 160 ரன்கள் எடுத்தது. முகமது ஹாரிஸ் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 66 ரன்னில் வெளியேறினார்.

ஓமன் அணி சார்பில் ஷா பைசல், ஆமிர் கலீம் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதையடுத்து, 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஓமன் அணி களமிறங்கியது. பாகிஸ்தான் அணியினரின் துல்லியமான பந்து வீச்சில் ஓமன் அணி விரைவில் விக்கெட்களை இழந்தது.

இறுதியில், ஓமன் அணி 67 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 93 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் சார்பில் சயீம் அயூப், சுபியான் முகீம், பாஹிம் அஷ்ரப் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles