Monday, February 2, 2026
HomeMain NewsSri Lankaபரீட்சைகளுக்கான கால அட்டவணை வௌியீடு

பரீட்சைகளுக்கான கால அட்டவணை வௌியீடு

2026 ஆம் ஆண்டில் நடைபெறும் பரீட்சைகள் தொடர்பான கால அட்டவணையை கல்வி அமைச்சு வௌியிட்டுள்ளது.

அதன்படி, 2025 (2026) கல்வி பொது தராதர (சாதாரண தரப்) பரீட்சை 2026-02-17 முதல் 2026-02-26 வரை நடைபெறும் என கல்வி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2026 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர (உயர்தரப்) பரீட்சை 2026-08-10 முதல் 2026-09-05 வரை நடைபெற உள்ளது.

அதேநேரம் 2026 ஆம் ஆண்டுக்கான, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2026-08-09 திகதியன்று இடம்பெறவுள்ளது.

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை 2026-12-08 முதல் 2026-12-17 வரை நடைபெறும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular