24 வயதிலேயே ரூ.250 கோடிக்கு அதிபதி: கெத்து காட்டும் பிரபல டி.வி. நடிகை

டி.வி. நடிகை ஒருவர், தனது 24 வயதிலேயே ரூ.250 கோடி சொத்துக்கு அதிபதி என்றால் நம்பமுடியுமா? ஆனால் நம்பித்தான் ஆகவேண்டும். அந்த நடிகையின் பெயர் ஜன்னத் ஜுபைர் ரஹ்மானி. இவர் பாலிவுட் டி.வி. தொடர்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கி, இன்று முன்னணி நடிகையாக மாறியிருக்கிறார்.

‘தில் மில்கே’, ‘காசி: அப் நா ராஹே தேரா கக்கா கோரா’, ‘புல்வா’ போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார்.

இதுதவிர ‘பியர் பேக்டர்’ போன்ற பல ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்ச்சியில் ஒரு எபிசோடுக்கு ரூ.18 லட்சமும், காமெடி கலந்த சமையல் நிகழ்ச்சியில் ஒரு எபிசோடுக்கு ரூ.2 லட்சமும், சமூக ஊடகங்களில் ஒவ்வொரு பதிவிற்கும் ரூ.1.5 முதல் ரூ.2 லட்சம் வரை சம்பளம் வாங்கி வருகிறாராம்.

நடிகை என்பதை தாண்டி ரியல் எஸ்டேட் மற்றும் ஜவுளித்துறையிலும் பங்களிப்பை ஈட்டி, தொழில் அதிபராகவும் கலக்கி வருகிறார். இவருடைய சொத்தின் நிகர மதிப்பு மட்டுமே சுமார் ரூ.250 கோடி என கூறப்படுகிறது.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles